Home உலக செய்திகள் வெற்றி பெற்றார் பொறிஸ் ஜோன்சன் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியாவது உறுதியானது!

வெற்றி பெற்றார் பொறிஸ் ஜோன்சன் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியாவது உறுதியானது!

138
0

நடந்து முடிந்த பிரித்தானியத் தேர்தலில் பிரதமர் பொறிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் ஆட்சியை தொடர உள்ளது.

பிரித்தானிய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இன்று (13/12) காலை 5.30 மணியளவில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில், 349 தொகுதிகளில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதநால் இம்முறை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது.