Home செய்திகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் மின் காற்றாலை – பணியாளர்களை அடித்து விரட்டிய மக்கள்!

மக்கள் குடியிருப்பு பகுதியில் மின் காற்றாலை – பணியாளர்களை அடித்து விரட்டிய மக்கள்!

99
0

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் ஒன்று கூடி அடித்து விரட்டியுள்ளனர்.

குறித்த பகுதியில், மின் காற்றாலை அமைப்பதற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் பலவற்றின் பின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இன்று கூடிய அப் பிரதேச மக்கள் பணிகளை உடன் இடைநிறுத்துமாறு கோரிய போது, இருதரப்பினரும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு பின் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதந் போது அங்கு கிடைக்கப்பெற்ற கல், தடி, மற்றும் ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.