
நடந்து முடிந்த பிரித்தானியத் தேர்தலில் தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த அக் கட்சியில் தலைவரும், பிரதம வேட்பாளருமான ஜெரமி கோர்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இத் தேர்தலில் ஏற்கனவே கைவசம் இருந்த பல்வேறு தொகுதிகளை இழந்த தொழிலாளர் கட்சி, இம்முறை 202 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது.
தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுளமை பிரித்தானியா மட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியானபின்னர், பொறிஸ் ஜோன்சன், பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அடிமட்டத்தில் இருந்து போராட்டங்களின் மூலமும், புரட்சியின் மூலமும், தனது மக்கள் பணியே மூலதனமாக கொண்டு இயங்கிவந்த்அ ஓர் உன்னத தலைவனை பிரித்தானியா புறக்கணித்துள்ளமை எதிர்காலத்தில் பிரித்தானியா சந்திக்கும் நெருக்கடிகள் மூலம் மீண்டும் பிரித்தானிய மக்களுக்கு உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.