Home செய்திகள் “இது பெளத்த நாடு” என யாழில் முழங்கிய பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ண!

“இது பெளத்த நாடு” என யாழில் முழங்கிய பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ண!

102
0

இது பௌத்த நாடு – முஸ்லீம் தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர்  மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

இது பௌத்த நாடு. இருப்பினும், மக்களிற்கு தமது சொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது பாதுகாப்பு படையினரின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முஸ்லீம் தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர்  அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் புத்துயிர்  பெற முயலும் அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள முஸ்லீம் தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.