Home உலக செய்திகள் பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று – மாற்றத்தை எதிர்பார்த்து ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று – மாற்றத்தை எதிர்பார்த்து ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

150
0

பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் இன்று காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்களிப்பு நிலையங்களில் நிற்பதை காணமுடிந்தது.

இத் தேர்தல் பலதரப்பட்ட மக்கள் மத்தியிலும் மாற்ற்றத்திற்கான தேர்தலாக பார்க்கப்படுவதுடன் உலக நாடுகளும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுமா..? இல்லையா….? என்பதற்கு அப்பால் பிரித்தானியா வாழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

பொய்யான வாக்குறுதிகளையும், நிலையில்லா தலைமையையும் கொண்ட பழமைவாத கட்சியிடம் இருந்து இந்த நாட்டை மீட்பதும் இத் தேர்தலில் பெரும்பாலான மக்களின் விருப்பமாகவும், தேவையாகவும் உள்ளது.

இந்த நிலையில் அதிக ஆதரவை பெற்றுவரும் தொழில் கட்சியின் தலைவர் ஜெரமி ஹோபன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

இருப்பினும் பிரித்தானியா வாழ் பெரும்பான்மையான தமிழர்கள் இம்முறை தொழில்கட்சிக்கே வாக்களிக்க வலியுறுத்தி வருவதையும், தமது வாக்கு தொழில்கட்சிக்கே என தெரிவித்து வருவதையும் சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.

எது எவ்வாறாயினும், தமது அன்றாட வாழ்க்கை, ஊதியம், சிறந்த வைத்திய வசதி, சிறந்த கல்வி, மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள், போக்குவரத்து வசதி, வரிக் குறைப்பு, வாழ்வாதாரத்திற்கான அரச சலுகை போன்ற பலவற்றை எதிர்பார்த்து மக்கள் இம்முறை அதிகளவில் ஆர்வத்துடன் வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.