Home செய்திகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 251 பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 251 பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு!

108
0

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 251 பதக்கங்களை பெற்று பதக்கங்களை வென்று இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையில் நேபாளத்தில் காத்மன்டு மற்றும் போக்ஹரா நகரங்களில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை வீரர்கள் 251 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தனர். இப் போட்டித் தொடரில் இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஸ், மாலைதீவுகள், பூட்டான் மற்றும் தொடரை நடத்தும் நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் பங்கு கொண்டன.

நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்த இப் போட்டித் தொடரில் இலங்கை அணி 40 தங்கப் பதக்கங்களையும், 83 வெள்ளிப் பதக்கங்களையும், 128 வெண்கலப் பதக்கத்தையும் உள்ளடங்களாக மொத்தம் 251 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.