Home செய்திகள் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஒரு இலட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

106
0

குறைந்த வருமானமுடைய கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியுடைய ஒரு இலட்சம் இளைஞர் , யுவதிகளுக்கு அரசாங்க மற்றும் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் பல்லின அபிவிருத்தி ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களின் பயிற்சியற்ற தொழில் வாய்ப்புக்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும் சமூகத்தில் குறைந்த வருமானத்தை கொண்ட குழுவினர் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் மற்றும் ஏனைய அனுசரனைகளின் அடிப்படையில் இவ்வாறான தொழில் வாய்ப்புகளுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதியினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியை கொண்ட ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை ஒன்றை அரசாங்கத்தின் திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவுக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளுதல் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வதற்கும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதியளவில் இந்த திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் செலவுகளை அறவிடும் அடிப்படையில் இந்த பணிக்குழுவின் சேவையை அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.