Home செய்திகள் கைதிகள் விடுதலையானதாக கூறப்படுவது பொய்: அருட் தந்தை சக்திவேல்

கைதிகள் விடுதலையானதாக கூறப்படுவது பொய்: அருட் தந்தை சக்திவேல்

97
0

சிறைச்சாலைகளில் உள்ள 89 அரசியல் கைதிகளில் நான் அறிய எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள ஏழு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இதுவரை அரசாங்கம் கூட உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் சில ஊடகங்கள் எவ்வாறு “அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள ஏழு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக” செய்தியை வெளியிட்டுள்ளனர் எனவும் கேள்வி எளுப்பினார்.

அத்தோடு கடந்த 2015 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஒரு அரசியல் கைதி மாத்திரம் விடுவிக்கப்பட்டார் என்றும் அதனைதவிர தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.