Home தாயக செய்திகள் அடை மழையால் வடக்கு, கிழக்கில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

அடை மழையால் வடக்கு, கிழக்கில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

99
0

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 51,223 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு 170,709 பேரும், வடக்கு மாகாணத்தில் 17,062 குடும்பங்களை சேர்ந்த 55,453 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 27 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.