Home செய்திகள் மழை நீரில் கரையும் மஹிந்தவின் “கார்ப்பெட் றோட்”

மழை நீரில் கரையும் மஹிந்தவின் “கார்ப்பெட் றோட்”

125
0

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் இலங்கையின் வடபகுதிகளில் போடப்பட்டு கவர்ச்சி விளம்பரப்படுத்தப்பட்ட “கார்ப்பெட் றோட்” மழை நீரில் கரைந்து பாதியாகி காட்சியளிக்கிறது.

சீரற்ற காலநிலையால் வெள்ளக்காடாக காட்சி தரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியும், பல சிதைவடைந்தும் காணப்படுகிறது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் A35 பிரதான வீதியில் பாதிப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த பகுதியூடாக செல்கின்றவர்களை மாற்று வழியாக 57 மைல்கள் சுற்றி மாங்குளம் வீதியை பயன்படுத்தி செல்லுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

சேதமுற்ற குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.