Home உலக செய்திகள் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று!

பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று!

102
0

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு கழுத்தறுப்பு சைகை காட்டிய லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளி என அறிவித்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவருக்கு தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று (06/12) இடம்பெற்ற போதே, 1986ஆம் ஆண்டின் பொது ஒழுங்கு சட்டத்தின்  பிரிவு 4A  (1) மற்றும் (5) ஆகியவற்றை  மீறி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றத்தைச் செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி (The chief magistrate, Emma Arbuthnot) அறிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, அவருக்கு 2000 பவுண்ட் தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அத்துடன்,வழக்கு செலவாக 1842.80 பவுண்டையும், பாதிக்கப்பட்டவருக்கு மேலதிகமாக 127 பவுண்டையும், இழப்பீடாக 450 பவுண்டையும் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிபதி பணித்துள்ளார்.

2018 பெப்ரவரி 4ஆம் நாள், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சைகை மூலம் எச்சரித்திருந்தார்.

அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட Majuran Sathananthan, Palliya Perera and Gokulakrishnan Narayanasamy ஆகியோர் சார்பில் ICPPG தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பே நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.