Home செய்திகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் – சாரதியை காப்பாற்றி வாகனத்தையும் மீட்டெடுத்த மக்கள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் – சாரதியை காப்பாற்றி வாகனத்தையும் மீட்டெடுத்த மக்கள்!

86
0

கிளிநொச்சி மாவட்டம் – இராமநாதபுரம் பகுதியில் வீதிக்கு மேலால் பாய்ந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த சாரதியை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்துள்ள அப்பகுதி மக்கள், பின்னர் வாகனத்தையும் கயிற்றின் உதவியுடன் நீண்ட நேர முயற்சியின் பயனாக மீட்டெடுத்துள்ளனர்.

வாகனத்தில் இருந்து மிட்கப்பட்ட சாரதி தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாடு முழுவதும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டு அபாய நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குளங்களின் வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகளும் இன்று திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.