மன்னார் – வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும் இன்று (6/12) வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
