Home உலக செய்திகள் பிரான்ஸில் மாபெரும் மக்கள் போராட்டம்!

பிரான்ஸில் மாபெரும் மக்கள் போராட்டம்!

88
0

பிராண்ஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மக்கள் போராட்டத்தால் பிரான்ஸ் அரசாங்கம் நிலை குலைந்துள்ளது.

இதனால் போராட்டக்காரர்களை அடக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் செய்தும், சிலர் மீது தாக்குதல்களையும் காவல்துறையினர் செய்துவருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல தொழிலாளர் ஒன்றியங்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களின் ஆதரவுடன் இப் போராட்டம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.