Home செய்திகள் தொடர் மழையால் 30,838 பேர் இதுவரையில் பாதிப்பு!

தொடர் மழையால் 30,838 பேர் இதுவரையில் பாதிப்பு!

102
0

இலங்கையில் தொடரும் தொடர் மழை காரணமாக இதுவரை 19 மாவட்டங்களைச் சேர்ந்த 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரதம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.