Home உலக செய்திகள் அமெரிக்காவில் – மீளப் பெறப்பட்ட கோத்தபாய விற்கு எதிரான 11 வழக்குகள்!

அமெரிக்காவில் – மீளப் பெறப்பட்ட கோத்தபாய விற்கு எதிரான 11 வழக்குகள்!

118
0

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி என்ற அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள சிறப்பு விலக்கு உரிமையை பயன்படுத்தி வழ்க்கில் இருந்து தப்புவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை. அவர் தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவரும் அவரிற்கு உதவியவர்களும் பொறுப்புக்கூறும் நிலை ஏற்படும் என உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இந்த தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டநாள் காத்திருக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா , கோத்தாபயவின் பதவிக்காலம் முடிவடையும் ஒரு நாளில் நீதி சாத்தியமாகலாம் என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கிடையில், வழக்கு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் இந்த குற்றங்களிற்கு யார் காரணம் என்பது தெளிவாகிவிடும் எனவும், சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக அவதானித்தவண்ணம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.