Home உலக செய்திகள் முள்ளிவாய்க்கால் பேரவல சாட்சிகளோடு பயணித்த MV Sun Sea கப்பல் உடைக்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் பேரவல சாட்சிகளோடு பயணித்த MV Sun Sea கப்பல் உடைக்கப்பட்டது!

87
0

இலங்கைத் தீவில் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபச தலைமையிலான அரசாங்கத்தினால் தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்” சாட்சியாக, 492 தமிழ் அகதிகளுடன் கனடாவை அடைந்து, உலகத்தின் கவனத்தை ஈர்த்த சன் சீ கப்பல் தற்பொது உடைக்கப்பட்டுள்ளதாக Canadian Maritime Engineerin (CME) அறிவித்துள்ளது.

MV Sun Sea என்ற கப்பல் 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர் மற்றும் குழந்தைகள் உட்பட 492 தமிழ் அகதிகளோடு மூன்று மாதங்கள் கடலில் பயணம் செய்து 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி கனடாவின் வன்கூவர் மானிலத்தின் பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பிராந்தியத்தில் வந்து நின்ற காட்சி உலகத்தின் ஊடகங்களிலும் வெளிவந்து பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.