Home செய்திகள் வடக்கு கிழக்கில் கன மழை – வீடுகள் சேதம், விவசாய நிலங்களும் பாதிப்பு!

வடக்கு கிழக்கில் கன மழை – வீடுகள் சேதம், விவசாய நிலங்களும் பாதிப்பு!

91
0

வடக்கு கிழக்கில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக பல வீடுகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அத்துடன் கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் பய விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நெற்செய்கை அனைத்தும் அழியும் தறுவாயில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதே வேளை, திருகோணமலையின் சில கிராமங்களில் வெள்லப் பெருக்கு காரணமாக சில வீதிகள் மூடப்பட்டுள்ளது. கந்தளாய், முள்ளிப்பொத்தானை, அக்போபுர மற்றும் சேருவில போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளதோடு, மக்களின் அன்றாட செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏர்பட்டுள்ள அதிக வெள்ளப்பெருக்கால் உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி, புளுகுணாவை ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.