Home ஆன்மீகம் நல்லூர் கந்தனில் இருந்து கதிர்காம கந்தன் வரை நல்லிணக்க பாதயாத்திரை ஆரம்பம்!

நல்லூர் கந்தனில் இருந்து கதிர்காம கந்தன் வரை நல்லிணக்க பாதயாத்திரை ஆரம்பம்!

114
0

இனங்களுக்கு இடையே நல்லிணக்கமும், அமைதியும் ஏற்பட இறையருள் வேண்டி யாழ் நல்லூர் கந்தன் முன்னிலையில் இருந்து கதிர்காமக் கந்தன் நோக்கி பாதயாத்திரை ஒன்று இன்று ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடுகளின் பின் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.