
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந் நிலையில், சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகளும் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.