Home செய்திகள் கட்டுனாயக்கா விமான நிலையத்தில் இரு தமிழர் கைது!

கட்டுனாயக்கா விமான நிலையத்தில் இரு தமிழர் கைது!

132
0

கட்டுனாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்பேனியாவுக்கு செல்வதற்காக விமான நிலையம் சென்ற இவர்களை இலங்கை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்பதோடு, இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.