Home செய்திகள் ஈரோஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரும், பிரபல பாடகி மாயா வின் தந்தையுமான அருட்பிரகாசம் (அருளர்) காலமானார்!

ஈரோஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரும், பிரபல பாடகி மாயா வின் தந்தையுமான அருட்பிரகாசம் (அருளர்) காலமானார்!

337
0

ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவருமான அருளர் என்றழைக்கப்படும் அருட்பிரகாசம் அவர்கள் சுகயீனம் காரணமாக காலமானார்.

இவர் பிரித்தானியாவின் புகழ் பெற்ற பாடகி மாயா (M.I.A) வின் தந்தை ஆவார்.

ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தவர் அருட்பிரகாசம் (அருளர்) என்பதோடு போராட்ட ஆரம்ப காலத்தில் “லங்கா ராணி” என்ற புதத்தகத்தையும் எழுதியிருந்தார்.

இவரிந் முயற்சியால் 1982 ஓகஸ்ட் மாதமளவில் அப்போது இருந்த இயக்கங்களில் முக்கிய 5 இயக்கங்களான LTTE, EROS, TELO, PLOT, EPRLF ஆகியவற்றை ஒன்றிணைத்து ஈழ விடுதலைக்கான குழு (CEL – Committee for Eelam Liberation) என்கிற பேரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி பொது வேலைத்திட்டம் குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்தது.

இருப்பினும், கொள்கை ரீதியான முரண்பாடுகளால் அந்த ஒற்றுமை முயற்சியும் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர் தனது மரணம் வரை தமிழீழ கனவை கொண்டிருந்தவர் என்பதோடு இறுதி காலங்களில் ஈரோஸ் அமைப்பு பல துண்டுகளாக பிளவுண்டு போயிருந்தமை பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.