Home செய்திகள் யாழ், நல்லூரில் மாவீரர் நினைவு கல்வெட்டின் முன்பாக மக்கள் அஞ்சலி!

யாழ், நல்லூரில் மாவீரர் நினைவு கல்வெட்டின் முன்பாக மக்கள் அஞ்சலி!

103
0

விடுதலைப் போரில் உயிர்நீத்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களுக்கு யாழ். நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக நேற்று மாலை இந்த கல்வெட்டுக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்த கல்வெட்டுகள் அமைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்கமுடியாது என்று கூறி நிகழ்வை தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் உயிரிழந்த எமது உறவினர்கள் என்றும், அவர்களுடைய சொந்த பெயர்களையே அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

எனினும் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த யாழ் பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றனர்.

இருப்பினும் அஞ்சலி நிகழ்வு யார் தடுத்தாலும் நடத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஏராளமானோர் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு சென்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.