Home செய்திகள் ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

102
0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 1990 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 27 அன்று இலங்கை விமானப்படையின் கோர விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 12 அப்பாவி பொதுமக்களை நினைவுகூர்ந்து வன்னி குரோஸ் தாயக நினைவேந்தல் பேரவையின் ஒழுங்கமைப்பில் நினைவேந்தல் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.