Home தாயக செய்திகள் உலகத் தமிழினம் நெஞ்சுருகி நினைவு கொள்ளும் “மாவீரர் நாள்” இன்று!

உலகத் தமிழினம் நெஞ்சுருகி நினைவு கொள்ளும் “மாவீரர் நாள்” இன்று!

164
0

தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காக தமிழீழம் எனும் இலட்சிய உறுதியோடு தம்மை அர்ப்பணித்து போராடி காற்றிலும், நீரிலும் கலந்துவிட்ட நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை உலகத் தமிழினம் நெஞ்சுருகி நினைவு கொள்ளும் புனித நாளான மாவீரர் நாள் இன்று.

இன்றைய தினம் மாவீரர்களை நினைவு கொள்ளும் முகமாக தாயகத்தில் பல பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை, துயிலுமில்லங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கவும், அச்சத்தை ஏற்படுத்தும் முகமாகவும் இலங்கையின் வடபகுதியில் பரவலாக இராணுவச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு சோதனைக் கெடுபிடிகள் இடம்பெற்று வருகிறது.

தமிழர்கள் பரந்து வாழ்வும் நாடுகள் அனைத்திலும் மாவீரர் நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் ஏற்பாடாகி உள்ளது.

குறிப்பாக தமிழகம் மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் மிகபிரம்மாண்டமான முறையில் ஏற்பாடாகியுள்ளது. இன்றைய தினம் இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.