Home செய்திகள் அதாவுல்லா பகிரங்க மன்னிப்பை மலையகத் தமிழர்களிடம் கோரவேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்!

அதாவுல்லா பகிரங்க மன்னிப்பை மலையகத் தமிழர்களிடம் கோரவேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்!

99
0

வெறுமனே அரசியல் பிழைப்புக்காக மற்றுமொரு சமூகத்தினை கீழ்தரமான வார்த்தைகளால் விழித்த அதாவுல்லா பகிரங்க மன்னிப்பை  மலையகத் தமிழர்களிடம் கோரவேண்டும் என்பது மட்டுமல்லாது முஸ்லீம் தலைவர்களும் அவரது செயலுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனியார் ஊடகமொன்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அதாவுல்லா மலையக மக்களை கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்தி விழித்தமை தொடர்பாக கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”இந் நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் வர்க்கமாக சித்தரிக்கப்படுகின்ற மலையக மக்கள் நாட்டில் எங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இன்று கல்விமான்களாகவும் புத்திஜீவிகளாகவும் பல அரச திணைக்களங்களில் உயர் அதிகாரிகளாவும் தீர்மானம் எடுக்கும் நிர்வாகிகளாகவும் மிளிர்ந்துவரும் நிலையில் அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு தாக்குவது ஏற்புடையதல்ல.

தனது சமூகத்தையும் அவர்களின் விடயங்களையும் தனது அரசியல் ரீதியான பயணத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அதாவுல்லா இன்று மலையக மக்களை சீண்டிப்பார்த்து அதனூடாக அரசியல் நடத்த கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை கண்டிக்கத்தக்கது என மேலும் தெரிவித்துள்ளார்.