Home செய்திகள் இணுவில் இளைஞர்களின் சமூக நலன் செயற் திட்டம்!

இணுவில் இளைஞர்களின் சமூக நலன் செயற் திட்டம்!

100
0

யாழ்ப்பாணத்தில் அண்மையில் அதிகரித்துள்ள டெங்கு தாக்கத்தையடுத்து, தமது கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் இணுவில் கந்தசுவாமி கோவில் இளைஞர்கள் களமிறங்கினர்.

இணுவில் கந்தசாமி கோவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் வலிதெற்கு பிரதேச சபை சுகாதார திணைக்களம் இணைந்து வீதிகள் வீட்டு வளவுகள் துப்பரவாக்கல் பணி நேற்று (24/11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சுமார் 30ற்கும் அதிகமான இளைஞர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த சிரமதான பணியின் போது இணுவைக்கந்தன் முன் வீதி, கெக்கிலிப்பாய் வீதி , பாப்பாத்தோட்ட வீதி, சிங்கத்தின் கலட்டி வீதி, செட்டிவளவு வீதி, வட்டுவினி வீதி, பிரதான வீதிகளின் சிறு வீதிகள், கே.கே.எஸ் வீதியின் வட்டுவினி சந்தியில் இருந்து கோவில் வாசல் வரை, குளக்கரை மைதானம் அதனை அண்டிய பெரும் பகுதிகள் என அனைத்திற்கு அருகாமையிலுள்ள வீடுகள், வளவுகள், வீதியோரங்கள் என அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.