Home முக்கிய செய்திகள் கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய தமிழர் தாயக வீதிகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய தமிழர் தாயக வீதிகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

206
0
Sl army patrol in northern province Sri Lanka.

தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கோத்தபய ராஜபக்சவினால் புதிய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் குறிப்பாக வடக்கில் அத்களவான துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படையினர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதோடு, வெளி போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்திவருகின்றனர்.

எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பெருமளவான மக்களை பங்குகொள்ள செய்யாமல் தடுக்கும் முகமாகவும், அச்ச சூழலை உருவாக்கி தமிழர்களை வீடுகளுக்குள் முடக்கும் தந்திரோபாயமாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.