Home செய்திகள் யாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வகை நோய் – மூன்று பிள்ளைகளின் தந்தை மயங்கி...

யாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வகை நோய் – மூன்று பிள்ளைகளின் தந்தை மயங்கி வீழ்ந்து மரணம்!

145
0

மூன்று நாட்கள் தொடர்ச்சியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கதிரையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் யாழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக காச்சலால் பாதிக்கப்பட்ட பலர் யாழ்ப்பாணத்தில் இறந்து வருவதே இந்த அச்சத்திற்கு காரணமாகும்.

உயிரிழந்தவர் நாவற்துறை தெற்கு யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த நாகரத்தினம் ராஜேந்திரன் வயது(43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ம் திகதி மேற்படி நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 21ம் திகதி இரவு வீட்டில் கதிரையில் இருந்தவர், திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் கூறியுள்ளார்.

நேற்றையதினம் இறப்பு விசாரணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.