Home முக்கிய செய்திகள் கோட்டாபயவின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

கோட்டாபயவின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

114
0

15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில்…..

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக மஹிந்த ராஜபக்‌ஷவும்,

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் அ​மைச்சராக சமல் ராஜபக்‌ஷவும்,

நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும்,

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சியும்,

தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக பந்துல குணவர்தனவும்,

சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சராக விமல் வீரவங்சவும்,

கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும்,

கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டலஸ் அழகப்பெருமவும்,

வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவும்,

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகன் தொண்டமானும்,

வௌிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சராக தினேஸ் குணவர்தனவும்,

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராக ஜனக்க பண்டார தென்னக்கோனும்,

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர‌வும்,

சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேனவும்,

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சராக ரமேஸ் பத்திரணவும்,

கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.