
எதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர்.
எனவே, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு முன்வர வேண்டும். அதுவே ஜனநாயக மரபாகும். என்றார்.