Home செய்திகள் கோட்டபாயவின் பதவியேற்பு விழாவிற்கு கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு!

கோட்டபாயவின் பதவியேற்பு விழாவிற்கு கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு!

115
0

இலங்கையின் 8வது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாக இன்று (18/11) கோட்டாபய ராஜபக்ச பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரதான முஸ்லிம் கட்சிகளிற்கு கோட்டாபய தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டபாயவின் பதவியேற்பு நிகழ்வு இன்று அநுராதபுரம் ஜயசிறி மகாபோதியில் நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும், முஸ்லிம்களும் கோட்டபாயவை முற்றாக நிராகரித்து வாக்களித்து இருந்த நிலையில் தற்போது விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்குகொள்ள மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.