
இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்வுசெய்வதற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை வெளியான வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ஷ முன்னணியில் உள்ளார்.
இச் செய்தி இலங்கை வாழ் தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இதுவரை 60 வீதமான தொகுதிகளின் வாக்குகள் வெளியாகியுள்ள நிலையிலேயே தற்போது கோட்டபாய முன்னிலையில் உள்ளார்.
இருப்பினும், முடிவுகள் வெளிவராத பிரதேசங்கள் பெரும்பாலானவை கோட்டபாயவிற்கு ஆதரவான இடங்கள் என்பதால் இலங்கையின் 8வது ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷவே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இத் தேர்தல் தனிச் சிங்கள பெளத்த மயமாக்கலை ஏற்க மறுத்துள்ளதையும், தமிழர்களின் ஒற்றுமையையும், இனப்படுகொலையை அரங்கேற்றி தமிழர் தாயகத்தை அபகரித்த மஹிந்த குளாமிற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தும் வடக்கில் முழுமையாகவும், கிழக்கில் பெரும்பாலான பகுதிகளிலுமாக கோட்டபாயவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.