
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேசங்களினதும் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.
இதனை உறுதி செய்வதாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிறேமதாச சற்று முன்னர் வெற்றி பெற்ற கோட்டபாயவிற்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, தனது தோல்வியை ஏற்று கட்சியின் துணை தலைவர் பதவியையும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.