Home செய்திகள் வட மாகாண வாக்குகளால் சற்று முன்னே வந்த சஜித்!

வட மாகாண வாக்குகளால் சற்று முன்னே வந்த சஜித்!

209
0

நாடளாவிய ரீதியில் பின்னடைவை சந்தித்திருந்த சஜித் பிறேமதாச சற்று முன்னர் வெளியான வடமாகான வாக்குகளால் கோட்டபாய ராஜபக்‌ஷவை பின் தள்ளி தற்போது முன்னிலையிலுள்ளார்.

பெரும்பான்மை இனத்தவரை கொண்ட தென்னிலங்கையில் பாரிய வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த கோட்டபாய ராஜபக்‌ஷ இருந்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வடமாகாணத்தின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் வாக்குகளின் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று சஜித் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இலங்கையின் முக்கிய பல மாவட்டங்களின் முடிவுகள் வெளிவராத நிலையிலும், முப்படையினரின் வாக்குகளால் கோட்டபாயவும், தமிழர்களின் வாக்குகளால் சஜித்தும் என அதி கூடிய வாக்குகளை பெற்றுள்ள போதிலும் யார் வெற்றி பெறுவார் என்பது தற்போது சொல்லமுடியாத நிலையே காணப்படுகிறது.