Home முக்கிய செய்திகள் இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!

240
0

இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (16/11) சனிக்கிழமை நடைபெறுகிறது.

இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் தமது வாக்குகளை செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதி கூடிய வேட்பாளர்களை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இத் தேர்தல் அமைந்துள்ள போதிலும் வாக்களிப்புக்கான காலம் இன்று மாலை 5:00 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இலங்கை வரலாற்றில் இம்முறை 31 வேட்பாளகள் போட்டியிடும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலங்கையை ஆளப்போகும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

தமிழர்களை தலைமை தாங்கவும். வழி நடத்தவும் சரியான ஒரு தமிழ் தலைமை இல்லாத சூழலில், தமிழர்கள் சார்பாக சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கான தமிழர்களின் ஆதரவு எவ்வளவாக இருக்கும் என்பதை தேர்தல் முடிவின் பின்னரே தெரிந்துகொள்ள முடியும்.

இம் முறை தேர்தலில் கோட்டபாயவே வெற்றி பெறுவார் என மேற்குலக நாடுகள் கணித்துள்ள போதிலும் சஜித் பிரேமதாசவே வெற்றி பெறுவார் என இலங்கை வாழ் மக்கள் எதிபார்ப்பதோடு, அதையே விடுப்புகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.