Home உலக செய்திகள் பிரித்தானியாவின் உச்ச நீதிமன்று முன் தமிழர்கள் போராட்டம்!

பிரித்தானியாவின் உச்ச நீதிமன்று முன் தமிழர்கள் போராட்டம்!

707
0

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்ரர் உயர் நீதிமன்றம் (High Court) முன் தமிழர்கள் இன்று போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை மூலம் கூறி தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த சிறீலங்காவின் இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ மீதான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று உயர் நீதி மன்றில் வழங்கப்பட உள்ள நிலையிலேயே இன்று இப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டு இன்றும் படுகொலைகளும், காணாமல் போதல்களும், நில அபகரிப்பு, அடாவடி என சிங்கள பெளத்த பேரினவாதத்தால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் புலம் பெயர்ந்து வாழ்ம் தமிழர்களையும் கொலை செய்வேன் என லண்டனில் வைத்து ஒரு சிறீலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கூறியமைக்கு தகுந்த தண்டனை வழங்க்கக் கோரியே இன்று இப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.