Home உலக செய்திகள் படுகொலை செய்யப்பட்ட ஈழ தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பரீஸில் நினைவு நிகழ்வு!

படுகொலை செய்யப்பட்ட ஈழ தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பரீஸில் நினைவு நிகழ்வு!

174
0

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் ஊடகப் போராளிகளாக செயலாற்றி உண்மைகளை வெளிக்கொண்டுவந்த “ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள்” பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நினைவுகொள்ளும் நினைவு நிகழ்வு ஒன்று பிராஸ் தலைநகர் பரீஸ் இல் நாளை 19/10/2019 சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வு நாளை மாலை 3:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை 14 Reu du Moulin des Lapins, 75014 Paris எனும் இடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. (Metro: Prenety – Ligne 13)

உதிரத்தை மையாக்கி உண்மைகளை வெளிக்கொணர்ந்து உலக அரங்கில் ஈழத் தமிழினம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற கொடுமைகளை, அழிவுகளை அம்பலப்படுத்தி சர்வதேச அரங்குவரை கொண்டு சென்று சாவைத் தழுவிய அந்த ஊடகவியலாளர்களை ஒரு கணம் எம் நெஞ்சத்தில் இருத்தி மலர் தூவி அஞ்சலிக்க அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.