Home செய்திகள் இலங்கையில் இந்தியப்படையினரால் அரங்கேற்றப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு இன்று!

இலங்கையில் இந்தியப்படையினரால் அரங்கேற்றப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு இன்று!

127
0

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நினைவேந்தப்பட்டது.

இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உளமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர், யாழ்.மாநகர உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்திறங்கிய இந்திய படையினரால் அரங்கேற்றப்பட்ட இப்படுகொலைகளில் முதலாவதாக “கொக்குவில் பிரம்படி படுகொலை” அமைந்தது.

1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கியால் சுட்டும், டாங்கிகளை கொண்டு வீதியில் போட்டு நசித்தும் துடிதுடிக்க கொல்லப்பட்டமை இங்கு நினைவுகூரத்தக்கது.