Home செய்திகள் நேற்று காணாமல் போனவர் இன்று எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

நேற்று காணாமல் போனவர் இன்று எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

95
0

வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள காட்டில் முச்சக்கர வண்டி ஒன்று தனிமையில் நின்றிருந்த நிலையில், அதனை சென்று அவதானித்த இளைஞர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே பற்றைக்குள்ளிலிருந்து இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த  சுகந்தன் (வயது-27) என்ற  இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு பயணித்த நிலையிலேயே காணாமற்போனார் என்று உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இளம் குடும்பத்தலைவர் இறுதியாக வவுனியா கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக அவரது தொலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளன.