Home செய்திகள் கொக்குத்தொடுவாயில் வாகனம் மோதி பாடசாலை மாணவன் பலி!

கொக்குத்தொடுவாயில் வாகனம் மோதி பாடசாலை மாணவன் பலி!

131
0

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக நேற்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

மிகவும் வசதியற்ற குடும்பச் சூழலிலும் கல்வி செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) என்ற மாணவனே விபத்தில் பலியானவராவார்.

கொக்குளாயில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த வாகனம் ஒன்று பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை மோதித் தள்ளியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படும் நிலையில் பொலிஸார் அவருக்கு சாதகமாக செயற்படுவதாக தெரிவித்து மக்கள் ஆத்திரமடைந்ததால் கொக்குதொடுவாயில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.