முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க நாட்டின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இன்று (07) பகல்; 11.30 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற குழுவினர் குறித்த பகுதிகளின் நிலமைகள் தொடர்பிலும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

