
இறுதி யுத்தத்தின் இறுதிக் கணங்களில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ள சிறுவர்களுக்காக நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற்றது.
பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள இலக்கம் 10, டவுணிங்க் வீதியில் இன்று மதியம் 12:00 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றைய இப் போராட்டத்தில் அதிகளவான சிறுவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு இலங்கை அரச பயங்கரவாதத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சிறார்களின் படங்களை தமது கைகளில் தாங்கியவாறும், சிறுவர்களுக்கான நீதிக்குரல்களை தாங்கிய சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியவாறு கலந்துகொண்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


