Home செய்திகள் யாழ் ஊடகவியலாளர் சோபிதனிடம் இரண்டரை மணி நேர விசாரணை!

யாழ் ஊடகவியலாளர் சோபிதனிடம் இரண்டரை மணி நேர விசாரணை!

137
0

பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய விசாரணைக்காக ஆஜராகிய வீரகேசரி பத்திரிகையின் யாழ்ப்பாணம் பிராந்திய செய்தியாளர் தி.சோபிதனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலையே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் விபத்து ஒன்றில் சிக்கி கடந்த 2 மாதமாக நடக்க முடியாத நிலையில் இருப்பதால் இந்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி தருமாறு பொலிஸ் தலைமையகத்திடம் கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டு கொழும்பு தலைமையகத்திலேயே விசாரணை இடம்பெற்றுள்ள்அமை குறிப்பிடத்தக்கது.