Home செய்திகள் கட்சி சார்பில்லாத பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார்: விக்கி

கட்சி சார்பில்லாத பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார்: விக்கி

130
0

விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை விக்னேஸ்வரன் மறுத்ததோடு, கட்சி சார்பில்லாத பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் தான் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை அடையாளம் காணும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.