Home செய்திகள் இம் மாத இறுதிக்குள் திறக்கப்படவுள்ள “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்”

இம் மாத இறுதிக்குள் திறக்கப்படவுள்ள “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்”

174
0

பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் 10 ஆம் திகதி நிறைவு செய்யவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவுற்று “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்” எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.