Home செய்திகள் புதிய இராணுவத் தளபதியின் உத்தரவில் வடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள்!

புதிய இராணுவத் தளபதியின் உத்தரவில் வடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள்!

102
0

புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வி நியமனத்தின் பின் வடக்கு கிழக்கு பகுதியில் திடீர் திடீரென புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் புதிய இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று திடீரென ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் சோதனையிடப்பட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த புதிய சோனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மக்கள் கடும் அச்சத்துக்கு மத்தியில் பயணங்களை மேற்கொள்வதோடு பெரும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியிலும் நேற்று முன்தினம் புதிய இரண்டு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.