Home தாயக செய்திகள் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் – சம்பந்தனுடன் சிவில் சமூகம் ஆலோசனை!

தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் – சம்பந்தனுடன் சிவில் சமூகம் ஆலோசனை!

141
0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில், இரா. சம்பந்தனை வடக்கு – கிழக்கின் மதத் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள்,மற்றும் புத்திஜீவிகள் சிலர், நேற்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ள நிலையில், தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்த நிலையிலேயே நேற்று (02/10) காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததுள்ளது.