Home செய்திகள் தேர்தலில் இருந்து வெளியேற்றப்படுவாரா கோட்டபாய – அவசரமாக கூடியது மஹிந்த அணி!

தேர்தலில் இருந்து வெளியேற்றப்படுவாரா கோட்டபாய – அவசரமாக கூடியது மஹிந்த அணி!

106
0

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தொடரப்பட்டுள்ள வழக்கு, மற்றும் கோட்டபாயவை கைது செய்ய முனைவது, உட்பட பலதரப்பட்ட அழுத்தங்களால் ஆடிப்போயுள்ள மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூடி ஆராய்ந்துள்ளது.

நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அவர்கள் கூடிய ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது முக்கியமான விடயங்கள் சில கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவரின் பிரஜா உரிமை ஆவணங்கள் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.