Home முக்கிய செய்திகள் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு:

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு:

96
0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக முன்மொழிவார் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச, முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிறேமதாசாவின் மகனும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஆவார்.

நீண்ட இழுபறிகளின் பின்னரும் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட மாட்டேன் என பிடிவாதமாக இருந்துவந்த சஜத் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள நிலையிலேயே இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.